விமானத்தில் சக பயணிகளை அடித்து ரகளை: இந்திய மதிப்பில் ரூ.68 லட்சம் அபராதம் விதித்து அதிரடி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சக பயணிகளைத் தாக்கியதற்காக 34 வயது அமெரிக்க பெண்ணுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு ஜூலை 7 அன்று டெக்சாஸிலிருந்து சார்லோட் செல்லும் விமானத்தில் ஹீதர் வெல்ஸ் என்ற பெண் சக பயணிகளை உதைத்து எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது. விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயற்சித்த அவரின் வாயை அடைத்து இருக்கையில் டேப்பால் கட்டப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் ஹீதர் வெல்சுக்கு இந்திய மதிப்பில் 68 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. தற்போது அபராதம் செலுத்தத் தவறியதற்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 

Night
Day