வைர வியாபாரி மெகுல் சோக்ஷி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ள மெகுல் சோக்சியை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில்  13 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான மெகுல் சோக்சி நேற்று பெல்ஜியத்தில் கைதாகி உள்ளார். இதையடுத்து அவரை மீண்டும் இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து சட்டப்பூர்வ வழிமுறைகளையும் அரசு பயன்படுத்தும் எனத் தெரிகிறது. கடந்த 2018 ஜனவரியில் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற சோக்சி, இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டால், பயங்கரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிறகு நடத்தப்படும் இரண்டாவது உயர்மட்ட நாடு கடத்தலாகும். இதனிடையே, இந்தியாவின் கோரிக்கைக்கு எதிராக, சோக்ஸி சட்ட சவால்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day