ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் - முகமது யூனுஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டம் காரணமாக அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, 100 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து, தலைவர் முகமது யூனுஸ் மக்களிடையே உரையாற்றினார். அப்போது, போராட்டம் மற்றும் வன்முறையால் உயிரிழந்த ஒவ்வொருவரின் தகவலையும் கவனமாக சேகரித்து வருவதாகவும், கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்தார். 

Night
Day