ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சாட்டை சுழற்றிய அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் படகுகளை குறிவைத்து 5 தாக்குதல்களை நடத்தியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர், 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி போராளிகள் குழு செயல்படுகிறது. இவர்கள், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, செங்கடல் வழியாக இஸ்ரேல் சென்று வரும் சரக்கு கப்பல்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தாக்கி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வெடி பொருட்கள் சுமந்து செல்லும் படகு, ஆளில்லா நீர் மூழ்கி கப்பல் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. 

Night
Day