ஹிஜாப் அணியாதவர்களை தண்டிக்கும் நாட்டில் ஆபாச நடிகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க ஆபாசப் பட நடிகை ஈரான் சென்று, அங்கு மூடப்பட்ட அமெரிக்க தூதரகத்தைப் பார்வையிட சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஆபாசப் பட நடிகை விட்னி ரைட், தனது ஈரானிய பயணத்தில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, ஹிஜாப் அணியாததற்கு நாட்டின் மக்களை பல்வேறு வகையில் தண்டிக்கும் அரசு ஆபாச நடிகையின் சுற்றுலாவுக்கு அனுமதியளித்துள்ளதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து பதிவிடத் தொடங்கினர். மற்ற வெளிநாட்டு குடிமக்களைப் போலவே  விசா வழங்கப்பட்டதாகவும் விட்னி ரைட்டின் ஆபாசமான" தொழில் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் ஈரான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Night
Day