ஹிஜ்புல்லா ஆயுதக் குழுவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லெபனானின் தெற்கே எல்லை பகுதியில் ஹிஜ்புல்லா ஆயுத குழுவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹிஜ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வந்தது.  இந்த நிலையில், லெபனான் நாட்டின் சிடான் நகருக்கு தெற்கே தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத கிடங்குகள் உள்ள பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் சிரிய நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. லெபனானின் போராளிகள் குழுவான ஹிஜ்புல்லா அமைப்பு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

Night
Day