ஹிஸ்புல்லாவை அழிப்போம் - இஸ்ரேல் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லெபனான் நாட்டைச் சேர்ந்த, ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா அழிக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம் என  இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நான்காவது மாதத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், இது குறித்துப் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர், போர் தங்களின் முதன்மையான நோக்கம் இல்லை என்றாலும் எதற்கும் தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். ஹிஸ்புல்லா எங்கெல்லாம் செயல்படுகிறதோ அங்கெல்லாம் இஸ்ரேல் களமிறங்கும் என்றும் மத்திய கிழக்கில் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நடவடிக்கை எடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்தம் என்பது ஹிஸ்புல்லாவுக்கு பொருந்தாது என்றும் பதிலடி தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day