ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லெபனானில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 

லெபனானில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக ஒரு வாரத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், நேற்று தரைவழி தாக்குதலை துவக்கியது. இஸ்ரேல் மீது ஈரான் 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் துவக்கப்பட்டது. எல்லையில் உள்ள இரும்பு வேலிகள் மற்றும் சுவர்களை உடைத்து விட்டு இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் ஊடுருவியது. அப்போது இரு தரப்புக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் சண்டையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். இதை இஸ்ரேல் ராணுவமும் உறுதி செய்தது. 

உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட செய்தியில், தங்கள் நாட்டை அழிக்க நினைக்கும் ஈரானுக்கு எதிரான கடினமான போரின் உச்சத்தில் இருப்பதாக கூறியிருந்தார். 

இந்நிலையில், ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு பதிலடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹில்புல்லா மீட்பு மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் தெற்கு புறநகர் பகுதியான தாஹியே-வில் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஹிஸ்புல்லா இஸ்ரேல் இடையேயான போரில் கடந்த ஓராண்டில் லெபனானில் ஆயிரத்து 900 பேர் கொல்லப்பட்டதாகவும், 9 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 12 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாக லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி கூறியுள்ளார்.

Night
Day