ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உடல் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் ட்ரோன் மூலம் கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சரின் உடலும் மீட்கப்பட்டது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததையடுத்து தற்காலிக அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவியேற்க உள்ளார். அடுத்த 50 நாட்களுக்குள் அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டுக் கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

Night
Day