ஹெலிபாக்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு - வெளியுறவுத்துறை அமைச்சரும் உயிரிழந்ததாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு அதிபர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உயிரிழந்ததாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை திறப்பு நிகழ்ச்சிக்காக ஹெலிகாப்டரில் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சென்றார். டெக்ரான் நகரில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோல்பா என்னும் பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் உடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டு, தேடுதல் பணி நடைபெற்று வந்தது. 16 மணி நேரத்திற்கு பிறகு அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டரின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் உயிரிழந்ததாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

Night
Day