ஹைட்டியில் நடைபெறும் போராட்டங்களுக்கு வேதனை தெரிவித்த ஐ.நா.

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹைட்டியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள ஐநா, ஹைட்டியில் பலர் கடுமையான பசி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவி செய்ய முயன்றால் அரசாங்கம் தடுப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளது. இதுவரை யாரும் கண்டிராத மோசமான சூழ்நிலை அங்கு நடைபெறுவதாகவும், வறட்சி, பலவீனமான அரசாங்கத்தால் அந்நாடு பின்னோக்கி சென்றதாகவும் ஐநா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் பிரதமர் பதவியை பிடிக்க அங்கு பலர் கொடூரமாக கொல்லப்படுவதாகவும், இதில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும் கூறியுள்ளது.

Night
Day