ஹ்வால்டிமிர் என பெயரிடப்பட்ட ரஷ்ய உளவு திமிங்கலம் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹ்வால்டிமிர் என பெயரிடப்பட்ட ரஷியாவின் உளவு திமிங்கலம் நார்வே கடற்கரையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்று உடலில் கேமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திமிங்கலம் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹ்வால்டிமிர் திமிங்கலம் நார்வே கடற்கரையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. திமிலங்கலம் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day