'பெஸ்ட் ஃபார் பிரிட்டன்' நடத்திய மெகா கருத்துக் கணிப்பு : ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பின்னடைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிட்டனில் நடைபெற்ற மெகா கருத்துக் கணிப்பு முடிவுகளில் 
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
பிரிட்டனில் இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது 
குறித்து சிவில் சமூக பிரச்சார அமைப்பான 'பெஸ்ட் ஃபார் பிரிட்டன்' மெகா கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சியைவிட 19 புள்ளிகள் முன்னிலையுடன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்கின் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் அவரைவிட தொழிலாளர் கட்சி 2.4 சதவீதம் மட்டுமே பின்தங்கி உள்ளது. 

Night
Day