10 மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்‍குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல், ​10வது மாதத்தை எட்டியுள்ளது. லெபனானை சேர்ந்த ​ஹிஸ்புல்லா இயக்‍கத்தினர் வடக்‍கு இஸ்ரேலில் 20 ராக்‍கெட்களை வீசி தாக்‍குதல் நடத்தினர். காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் எழுந்துள்ள கண்டனங்களை மீறி, இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 98 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்ததாகவும் 87 ஆயிரத்து 705 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம் அமெரிக்‍கா, எகிப்து, கத்தார் நாட்டு தலைவர்கள் 
இஸ்ரேல், காசா இடையே அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தவும் போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Night
Day