126 ஆண்டுகளுக்‍கு ஒரு முறை நிகழும் முழு சூரிய கிரகணம் - வரும் 8-ம் தேதி அரிய நிகழ்வை காண அமெரிக்க மக்கள் ஆர்வம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

126 ஆண்டுகளுக்‍கு ஒரு முறை வானில் நிகழும் அரிய முழு சூரிய கிரகணத்தை அமெரிக்‍க மக்‍கள் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

வருகிற ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வை கோடிக்‍கணக்‍கான அமெரிக்‍க மக்‍கள் காண உள்ளனர். ​மெக்‍சிகோ பசிபிக்‍ கடற்கரையில் ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11 மணி 7 நிமிடத்தில் தோன்றும் சூரிய கிரகணம், வட ​அமெரிக்‍காவில் மாலை 5.19 மணிக்‍கு முடிகிறது.  இந்த சூரிய கிரகணம் டெக்‍ஸாஸ், ஓக்லஹாமா, மிசெளரி, இல்லினாய்ஸ், கெண்டுகி, நியூயார்க்‍ என பல்வேறு அமெரிக்‍க மாகாணங்களிலும், கனடாவிலும் காண இயலும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Night
Day