14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான ஜூலியன்: மனைவி, தந்தையை கட்டியணைத்து பாசமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

14 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட ஜூலியன் அசாஞ்சே சொந்த நாடு திரும்பியவுடன் மனைவியை கட்டியணைத்து பாசமழை பொழிந்த வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டது. இது அமெரிக்க ராணுவ வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு மீறல்கள் ஆகும். இதன் காரணமாக அதன் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நீதிமன்றத்தால் விடுதலையான ஜூலியன் அசாஞ்சே, தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தார். அப்போது தன்னை வரவேற்க காத்திருந்த மனைவி மற்றும் தந்தையை கட்டியணைத்து ஜூலியன் அசாஞ்சே பாசமழை பொழிந்தார்.

Night
Day