2 ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் தரையிறக்கும் சோதனை வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டு பால்கன் வகை ராக்கெட்டுகளை ஓரே நேரத்தில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை....

ஒரே நேரத்தில் இரண்டு பால்கன் வகை ராக்கெட்கள் தரை இறங்கும் வீடியோவை எலான் மாஸ்க் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்....

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸெக்ஸ் தனது மறு பயன்பாட்டிற்கான ராக்கெட் வகையான ஃபால்கன் வகை இரண்டு ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு ஏவி மீண்டும் பூமிக்கு ஒரே நேரத்தில் திரும்பி வரும் படி சோதனை செய்துள்ளது.

அப்படி ஒரே நேரத்தில் பூமிக்கு திரும்பி வரும்படி சோதனை செய்யப்பட்ட இரண்டு ராக்கெட்டுகளும் சரியான நேரத்தில் தரையிறங்கும் வீடியோவை அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு விழா இந்த வீடியோ பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

Night
Day