2024ஆம் ஆண்டில் மட்டும் 7,528 ஐ.டி. ஊழியர்கள் பணிநீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024ஆம் ஆண்டில் கடந்த 15 நாள்களில் மட்டும் 7ஆயிரத்து 528 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு ஐ.டி. ஊழியர்களுக்கு  அதிர்ச்சி அளிப்பதாக மாறியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களான அமேசான், கூகுள் உள்ளிட்ட 48 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த 15 நாள்களில் 7ஆயிரத்து 528 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களில் மேலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரத்து 150 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2லட்சத்து 60ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில் நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகலாம் என்பதால் ஐ.டி. ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Night
Day