எழுத்தின் அளவு: அ+ அ- அ
10 ஆண்டுகளுக்கு முன் 239 பேருடன் காணாமல் போன எம்எச் 370 விமானத்தை மீண்டும் தேடும் பணியில் மலேசியா ஈடுபட உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் எம்.எச். 370 விமானம் புறப்பட்டது. அப்போது 227 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் பயணித்தனர். மர்மமான முறையில் இந்தியப்பெருங்கடல் பகுதியில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலோர் சீனர்கள். அந்தப் பயணிகளின் உறவினர்கள் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு எதிராக சீனாவில் வழக்கு தொடுத்துள்ளதுடன் அந்த விமானத்தை மீண்டும் தேட வேண்டும் என கோரியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாசை சேர்ந்த நவீன தொழில்நுட்ப நிறுவனமான ஓஷன் இன்பினிட்டி நிறுவனத்துடன் இணைந்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மலேசியா ஈடுபட போவதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.