3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, டல்லாஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


மக்களவை எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக ராகுல் காந்தி, அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, விமானம் மூலம் டெக்சாஸ் மாகாணம் சென்ற ராகுல் காந்திக்கு, டல்லா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து, டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாடுகிறார். அதன்பின்னர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் சந்திக்கிறார். 

டெக்சாஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை வாஷிங்டன் செல்லும் ராகுல் காந்தி, அங்குள்ள இந்திய வம்சாவழியினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். மேலும், தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்திலும் உரையாற்றுகிறார். வரும் 10ஆம் தேதி வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 3 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண் அன்று இரவே தாயகம் திரும்ப உள்ளார்.

Night
Day