300க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டது பாகிஸ்தான் ராணுவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் பயணியர் ரயிலை சிறைபிடித்த பயங்கரவாதிகள் 33 பேரும், ராணுவத்தால் கொல்லப்பட்டு, 300க்‍கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கிச் சென்ற 'ஜாபர் எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஒன்பது பெட்டிகளில் 450க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பெரோ குன்ரி, கடாலார் பகுதிகள் இடையே ரயில் சென்றபோது, பலுசிஸ்தான் தனி நாடு கேட்டு போராடி வரும் பயங்கரவாதிகள், தண்டவாளத்தை வெடிகுண்டு மூலம் தகர்த்தனர். ரயிலில் ஏறிய பயங்கரவாதிகள், அங்கிருந்த இன்ஜின் டிரைவர் மற்றும் ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றனர்; ரயில் பயணிகளை சிறைபிடித்தனர். தகவலறிந்து சென்ற ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில், 21 பயணிகள், 4 துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day