6 கோள்கள் ஒரே வரிசையில் நிற்கும் அரிய நிகழ்வு - டெலஸ்கோப் மூலம் பார்வையிடலாம் - விஞ்ஞானிகள் தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விண்ணில் ஆறு கோள்கள் வரிசையாக ஒரே பகுதியில் தெரியும் "கோள்கள் தொடர் வரிசை நிகழ்வு" இன்றும், நாளையும் நடைபெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய தேதி பிறை சந்திரனுக்கு கீழே சனி கிரகமும், நாளை சந்திரனுக்கு கீழே செவ்வாய் கிரகமும் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழன், புதன், செவ்வாய், யுரேனஸ், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்களையும் ஒரே பகுதியில் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளனர். யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்கள் தூரத்தில் இருப்பதால், வெறும் கண்ணால் காண்பது கடினம் என்றும், டெலஸ்கோப் உதவியோடு பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day