Deep Seek செயலியை தடை செய்தது தென்கொரிய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாதுகாப்பு தரவுகள் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, சீனாவின் AI தொழில்நுட்ப செயலியான Deep Seek-ஐ தென்கொரிய அரசு தடை செய்துள்ளது. சீனாவின் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் மூலம் பணிகளை எளிதாக மேற்கொள்ளும் முயற்சிகளை பலநாடுகள் முன்னெடுத்து வருகிறது. அதேநேரத்தில் இத்தொழில் நுட்பம் மூலம் பாதுகாக்கப்பட்ட தரவுகள் கசிவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தரவுகள் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி தென்கொரிய நிதியமைச்சகம் Deep Seek செயலியை தடை செய்துள்ளது. அதன்படி, வெளியுறவு அமைச்சகம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சங்களில் உள்ள கணினிகளில் Deep Seek தொழிலுநுட்பத்தை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 



Night
Day