UAE சிறையில் இருக்‍கும் சுமார் 900 பேரை மீட்ட இந்திய தொழிலதிபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாயில் வசிக்‍கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் சுமார் இரண்டரை கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்து, ஐக்‍கிய அரபு எமிரேட்ஸில் சிறையில் இருக்‍கும் சுமார் 900 பேரை மீட்டு சொந்த ஊருக்‍கு கொண்டுவர ஏற்பாடு செய்துள்ளார். ஃபெரோஸ் மெர்ச்சென்ட் என்ற 66 வயதான, தங்க நகை வியாபாரி, இந்த ஆண்டின் தொடக்‍கத்திலிருந்து, ஐக்‍கிய அரபு எமிரேட்ஸின் பல இடங்களில் சிறையில் இருக்‍கும் இந்தியர்கள் சுமார் 900 பேரை மீட்டு தாயகம் கொண்டுவர நடவடிக்‍கை எடுத்துள்ளார். இதற்காக இந்திய நாணய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாயை அந்நாட்டு அரசுக்‍கு அவர் நன்கொடையாக அளித்துள்ளார். ரம்ஜான் பெருநாளையொட்டி, மனிதநேயம், மற்றவர்களை மதித்தல், மன்னித்தல், அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்துதல் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் இந்த சேவையை தான் செய்வதாக ஃபெரோஸ் மெர்ச்சென்ட் தெரிவித்துள்ளார். 

Night
Day