அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள திமுக பிரமுகர் ஞானசேகரன், பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக பள்ளிகரணை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சென்னை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள பெரிய பங்களா போன்ற வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக ஞானசேகரன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 7 வீடுகளில் கைவரிசை காட்டியதாகவும், கொள்ளையடித்த நகைகளை விற்று  அதில் வந்த தொகையை வைத்து சொகுசு கார் மற்றும் பிரியாணி கடை வைத்ததாகவும் ஞான சேகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து  சிறையில் இருக்கும் ஞான சேகரனை 3 நாட்கள் காவலில் எடுத்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day