அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை - ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகரன், காவல்நிலையத்தில் உள்ள கழிவறையில் தவறி விழுந்ததால் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்தார்.

Night
Day