அதிகாரி கண்டித்ததால் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தற்கொலை முயற்சி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலத்தில் ஒப்பந்த ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 


எண்ணூர் 2-வது வார்டில் ஒப்பந்த ஊழியராக தாமஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுத்து வந்ததால் அதிகாரிகள் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னை கொசு மருத்து தெளிக்கும் பணியிலிருந்து, வேறு பணிக்கு மாற்றுமாறும் அதிகாரிகளிடம் தாமஸ் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் ஒப்புக்கொள்ளாததால், விரக்தி அடைந்த அவர் மாநகராட்சி அலுவலகத்திலேயே தற்கொலைக்கு முயன்றார். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்

Night
Day