க்ரைம்
விமானத்தில் கடத்திவரப்பட்ட 3 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் - இளம் பெண்ணை கைது...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சுரேஷ் பாபுவை மிரட்டி 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்கக்கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதில் அவர் சாட்சிகளை தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், ஆதாரங்களை கலைக்க முயற்சி செய்யக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 2 கோடி ?...