எழுத்தின் அளவு: அ+ அ- அ
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தற்போது அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி, கே.எம்.ஸ்பெஷலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அசோக் சிகாமணி, கே.எஸ்.மினரல்ஸ் நிறுவனம், பி.ஆர்.எம் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.ராஜ மகேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்களையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனையடுத்து கூடுதல் குற்றபத்திரிகையில் உள்ள அனைவரும் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏழில் வேலவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.