அரசு கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் காதலிக்க மறுத்த அரசு கல்லூரி மாணவியை, மாணவன் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அரசு கல்லூரி மாணவியை, கல்லூரி மாணவன் கத்தியால் குத்திவிட்டு தானும் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையத்தில், நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day