அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிளாப்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்பவர், தனது மகளை பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இன்று காலை பிரசவ வார்டில் உள்ள கழிவறைக்கு சென்ற கண்ணம்மாள் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில்  சென்ற போலீசார், கழிவறையை திறந்து பார்த்த போது கண்ணம்மாள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day