அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான வழக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரிய அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது. 

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் வழங்ககோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சூரியகாந்த் உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது சிபிஐ மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பின் தேதியை குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Night
Day