எழுத்தின் அளவு: அ+ அ- அ
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிப்புரிந்து வந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மாணவிகளிடம், போலீஸ் உயர் அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.