ஆந்திரா : 8 சவரன் நகைக்காக மூதாட்டியை கொல்ல முயன்ற கேபிள் டெக்னீசியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஒருவர் நகைக்காக கொலை செய்ய முயற்சிக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி உள்ளது. அனகாபள்ளியில் உள்ள கவரபாலம் பகுதியில் லட்சுமி நாராயணம்மா என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஒருவர், 8 சவரன் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கோவிந்த் என்பதும், கேபிள் டெக்னீசியனாக வேலை பார்ப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுதது, அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

varient
Night
Day