ஆந்திரா: தனியாக வீட்டில் இருந்த மூதாட்டியை நகைக்காக கொல்ல முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நகைக்காக ஒருவர் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயலும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனகாப்பள்ளி மாவட்டம் கவரபாலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டியை, வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர் துணியால் கழுத்தை இறுக்கி கொல்ல முயன்றுள்ளார். மூதாட்டி மயங்கிய நிலையில், அவரது கழுத்தில் இருந்த எட்டு சவரன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்த உறவினர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்டது கேபிள் டிவியில் பணிபுரியும் கோவிந்த் என தெரியவந்ததையடுத்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day