ஆன்லைன் ட்ரேடிங் மோசடி : 7 மென்பொறியாளர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆன்லைன் ட்ரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என முகநூலில் விளம்பரம் செய்து பல பேரிடம் மோசடியில் ஈடுபட்ட 7 மென்பொறியாளர்களை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அரசு ஊழியர் கோகிலா. இவர் ஆன்லைன் ட்ரேடிங் செய்தால் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி சிறிது சிறிதாக குளோபல் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனத்தில் 18 லட்சம் ரூபாய் வரை முதலீட்டு செய்துள்ளார். இறுதியாக ஜுன் மாதம் மூதலீடு செய்த அவர் தனக்கு எந்த லாபமும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பெங்களூர் மற்றும் நெய்வேலியை சேர்ந்த 7 மென்பொறியாளர்களை கைது செய்தனர். விசாரணையில் இதேபோல் பலரிடம் ஐம்பது கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.

Night
Day