ஆன்லைன் ஸ்கேம் மூலம் ரூ.50 லட்சம் இழந்த வங்கி ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயம் - 2 மகன்களுடன் மனைவி மர்ம மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கலில் ஆன்லைன் ஸ்கேம் மூலம் 50 லட்சம் இழந்த வங்கி ஊழியர் கடிதம் எழுதிவிட்டு மாயமான நிலையில், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாமக்கல் உள்ள பதி நகரில் பிரேம்ராஜ் என்ற தனியார் வங்கி ஊழியர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாக பிரேம் ராஜ் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது அவரது மனைவி மோகனபிரியா, அவர்களின் இரு குழந்தைகளான 6 வயது பிரினிதாஸ், 2 வயது பிரினிராஜ் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது கிடந்தது தெரிந்தது. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர்  3 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே கடந்த 10 நாட்களாக ஆன்லைன் ஸ்கேம் மூலம் பிரேம்ராஜ் 50 லட்சம் வரை இழந்துள்ளதாகவும், கடனை எப்படி கட்டுவது என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் வீட்டிலிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. 
இந்த சூழலில் 3 பேரும் உயிரிழந்ததால், பிரேம்ராஜை தொடர்பு கொள்ள முயன்ற போலீசார் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், அவர் எங்கு சென்றார் எனவும் விசாரித்து வருகின்றனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day