ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கு காவல் நீட்டிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார், அதன் நகலை குற்றவாளிகள் பெற மறுத்த நிலையில், 27 பேரின் நீதிமன்ற காவலை வரும் 14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day