ஆருத்ரா கிளை இயக்குநரின் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநரின் ஜாமீன் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜ், மோசடிக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை இந்த மனுமீது விசாரணை நடத்தி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2-வது முறையாக ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Night
Day