இந்தியாவில் கடந்த ஆண்டு 1,70,924 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரத்துத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் உள்ள பொதுமக்களிடம் தற்போது தற்கொலை எண்ணம் அதிகரித்துள்ளதாகவும் 2 மணி நேரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களை பார்க்கும் பொழுது தற்கொலை உணர்ச்சிக்கு மறைமுகமாக தூண்டப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 924 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே ஒருவருக்கு தற்கொலை எண்ணம் வரும்பொழுது நொடியிலேயே மற்றவரிடம் பேசி அந்த மனக்குழப்பத்தை சரி செய்து கொண்டாலே தற்கொலை எண்ணமே வராது என 'சினேகா எஸ்ஏஎஸ்' அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.

Night
Day