இந்திய வம்சாவளித் தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை - லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொலை வழக்கில் குஜராத் போலீசாரால் தேடப்பட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிக்கு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. லண்டன் வாழ் தம்பதியான ஆரத்தி தீர் மற்றும் அவருடைய கணவர் கவல்ஜித் சின்ஹ ராய்ஜடா ஆகியோர் குஜராத்தில் ஒரு சிறுவனை தத்தெடுத்து பின்னர் காப்பீட்டுப் பணத்திற்காக அவனைக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர்களை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் தடை விதித்ததால் தம்பதி தப்பித்துக் கொண்டனர். ஆனால் அவர்கள், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டறிந்த ஆஸ்திரேலிய போலீசார் அது குறித்து இங்கிலாந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அவர்களிடம் இருந்து 514 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், தம்பதிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

Night
Day