எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீலகிரி மாவட்டம் உதகை அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உதகை அருகே தலைகுந்தா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்த பகுதியில் திரண்டு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர், குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.