உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கல் குட்டையில் இருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எடைக்கல் போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றினர். அதன் அருகில் இருந்த மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அந்த உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கல் குட்டையில் இறந்து கிடந்தது அஜீஸ் நகரை சேர்ந்த தேவி மற்றும் அவரது மகன் பிரவீன் என்பது தெரிய வந்தது. தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தேவியின் கணவர் முத்து என தெரியவந்ததை அடுத்து, இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day