எழுத்தின் அளவு: அ+ அ- அ
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
கந்தி குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் போலி NCC சிறப்பு முகாம் என்ற பெயரில் 8-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், 10-க்கும் மேற்பட்ட 13 வயது மாணவிகளுக்கு போலி பயிற்சியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து துரிதமாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், இனி இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினர்.