எழுத்தின் அளவு: அ+ அ- அ
சேலத்தில் மாயமான இளம் பெண் ஏற்காடு மலைப்பாதையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் உள்ள சுமார் 40 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சடலத்தின் அருகில் கிடந்த பையில் இருந்து பெண்ணின் அடையாள அட்டை, விடுதி விலாசம் மற்றும் அவரது புகைப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், அந்த பெண் திருச்சியை சேர்ந்த லோகநாயகி என்பதும், சேலத்தில் தங்கி பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்டு மலை உச்சியிலிருந்து இளம்பெண்ணின் சடலம் வீசப்பட்டதா? அல்லது தற்கொலையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.