கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை - சுட்டுப்பிடித்த காவல்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவில்பட்டியில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போலீசார் கைது செய்ய சென்ற போது அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றவரை போலீசார் சுட்டு பிடித்தனர். 

வீரவாஞ்சிநகர் பகுதியில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் மாரிசெல்வம் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவர் மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.  பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மாரிசெல்வம், மாரியப்பனை தேடி வந்தனர். 

இந்நிலையில், மாரியப்பனை கைது செய்ய முயன்றபோது காவல்துறையிடம் இருந்து தப்பி ஓட முயன்ற அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதேபோன்று புதுக்கோட்டையில் மாரிசெல்வம் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அவரை கைது செய்ய முயன்றபோது உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் பொன்ராம் ஆகியோரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பிற்காக மாரிசெல்வத்தை போலீசார் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர் மாரிசெல்வம் மற்றும் காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day