கன்னியாகுமரி: கோயில் படையலில் வைக்கப்பட்டிருந்த மதுவை குடித்தவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கோயில் படையலில் வைத்திருந்த மதுவை குடித்த தொழிலாளி பலியான சம்பவத்தில், மதுவில் விஷம் கலந்திருப்பது முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. கோட்டார் வடலிவிளை சுடலைமாடன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு உணவுடன் மதுவும் படையலாக போடப்பட்டது. பூஜைகள் முடிந்ததும் இந்த மதுவை செல்வகுமார், அருள் ஆகியோர் அருந்தியுள்ளனர். அப்போது, தனது நண்பர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அருள், மது குடித்த தங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற நண்பர்கள், மயக்க நிலையிலிருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு செல்வகுமாரை பரிசோத்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் அருளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், மதுவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்துள்ளது.

varient
Night
Day