கன்னியாகுமரி: பாறையின் அருகே சடலமாக மீட்கப்பட்ட நபரின் வழக்கில் திடீர் திருப்பம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட நபரின் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுங்கான்கடை சிலோன் காலனியை சேர்ந்த செல்வம் என்பவர் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல்போன நிலையில் காவலாளி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பாறை அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து செல்வத்தின் மனைவி ராணி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்வம் வீட்டின் அருகே வசிக்கும் மெல்வின் என்பவர் பாறையில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

varient
Night
Day