கருத்து வேறுபாடு - யூடியூப் காதல் ஜோடி தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானா மாநிலத்தில் யூடியூப் சேனல் நடத்தி வந்த காதல் ஜோடி 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பஹதுர்கரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கார்விட், நந்தினி என்ற காதல் ஜோடி லிவ்-இன் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் யூடியூப்பில் சொந்த சேனலை நடத்தி குறும்படங்களையும் தயாரித்துள்ளனர். இந்நிலையில், ஏதோ ஒரு பிரச்னையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இரண்டு பேரும் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day