எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை நீதிமன்ற வாயிலில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள், சேரன்மகாதேவியில் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார்.
தற்போது விடுமுறை காரணமாக தனது சொந்த ஊரான சேரன்மகாதேவிக்கு வந்திருந்த மணிகண்டன் அங்குள்ள தனது வயல்வெளியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் அவரது உறவினர்களுடன் இணைந்து மணிகண்டனை பொதுமக்கள் நடமாடும் பகுதியில் வைத்து கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், மணிகண்டனின் உறவினர்கள் சிலர் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொலை செய்துள்ளனர். இதற்கு பழி வாங்கும் நோக்கத்தோடு மாயாண்டி தலைமையில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.